ADDED : ஜூலை 03, 2024 05:58 AM

மதுரை: புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஆறு லட்சம் காலியிடங்களை நிரப்ப வேண்டும். உள்ளாட்சி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் கூடாது, காலை உணவு திட்டத்தை சத்துணவு துறையினரே செயல்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையில் பொதுப்பணித் துறை வளாகத்தில் கிளைத் தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். செயலாளர் ஞானப்பிரகாசம் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் செல்வம், மாவட்ட செயலாளர் நீதிராஜா, நிர்வாகிகள் மகுடீஸ்வரன், பஞ்சவர்ணம் பேசினர்.
உசிலம்பட்டி
ஊராட்சி ஒன்றியம், ஆர்.டி.ஓ., தாலுகா, மருத்துவமனை, நகராட்சி அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டக்கிளை தலைவர் ஆசையன், செயலாளர் இந்திராணி, மாவட்ட துணைத்தலைவர் மனோகரன் பங்கேற்றனர்.