ADDED : ஜூலை 03, 2024 05:59 AM
மதுரை : தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மதுரை கே.எல்.என். பொறியியல் கல்லுாரி, நல்லமணி பள்ளி, மாணிக்கம் ராமசாமி கல்லுாரியில் முதல் டிவிஷன் லீக் 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன.
போட்டி முடிவுகள்:
முதல் போட்டியில் ப்ரீக்ஸ், மெஜஸ்டிக் கப்ஸ் அணிகள் மோதின. ப்ரீக்ஸ் அணி 41.2 ஓவர்களில் 150 ரன் எடுத்தது. கலியுல் ரஹ்மான் 51, முகமது தாகீர் 28 ரன் எடுத்தனர். மணி 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய மெஜஸ்டிக் கப்ஸ் அணி 39.5 ஓவர்களில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. செல்வபிரபு 53, அறிவு 26 ரன் எடுத்தனர். கார்த்திக் 5 கிரிக்கெட் வீழ்த்தினார்.
2வது போட்டியில் சச்சின் மெஜஸ்டிக் அணிகள் மோதின. மெஜஸ்டிக் அணி 50 ஓவர்களில் 208 ரன் எடுத்தது. பிரபு 66, ஸ்ரீஹரி 32 ரன் எடுத்தனர். மதி 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய சச்சின் அணி 30 ஓவர்களில் 117 ரன் எடுத்தது. கார்த்திக் 27, வெங்கட் பிரசாத் 27 ரன் எடுத்தனர். ராஜ்குமார் 4, ஸ்ரீஹரி 3, அசோக் பாலி 3 விக்கெட் வீழ்த்தினர். மெஜஸ்டிக் அணி 91 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3வது போட்டியில் ஸ்பார்க் கோல்ட்ஸ், மிஸ்ட்ரி அணிகள் மோதின. ஸ்பார்க் கோல்ட்ஸ் அணி 47.2 ஓவர்களில் 217 ரன் எடுத்தது. மாதவன் 47, பிரகாஷ் 43 ரன் எடுத்தனர். அடுத்து ஆடிய மிஸ்ட்ரி அணி 41.5 ஓவர்களில் 196 ரன் எடுத்தது. சையது இப்ராஹிம் 84, மணிகண்டன் 52 ரன் எடுத்தனர். சரவணன் 4, கார்த்திக் குமார் 3 விக்கெட் வீழ்த்தினர். ஸ்பார்க் கோல்ட்ஸ் அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மதுரை டி.வி.எஸ். பள்ளியில் நடந்த 2வது டிவிஷன் 30 ஓவர் போட்டி முடிவுகள்:
முதல் போட்டியில் டி.வி.எஸ். ஸ்ரீசக்ரா, டி.வி.எஸ். அபராஜிதா அணிகள் மோதின. ஸ்ரீசக்ரா அணி 30 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 226 ரன் எடுத்தது. உதயன் 73, தனசேகர் 47 ரன் எடுத்தனர். சந்தோஷ் 3, பாண்டிமுருகன் 3 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து ஆடிய அபராஜிதா அணி 29.1 ஓவர்களில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனா 74, அருண் காமராஜ் 55, பாண்டியா 34 ரன் எடுத்தனர். மாதவன் ரமேஷ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
2வது போட்டியில் தயா, சூப்பர் சானிக் கன்கார்டு அணிகள் மோதின. தயா அணி 25 ஓவர்களில் 179 ரன் எடுத்தது. தங்கபாண்டி 25, கதிர் 25 ரன் எடுத்தனர். சக்தி 3, மாயன் 3 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து ஆடிய சூப்பர் சானிக் கன்கார்டு அணி 24.4. ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராம் பிரசாத் 79, வினோத் கண்ணன் 46 ரன்கள் எடுத்தனர்.