/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரூ.12 லட்சம் டோல்கேட் கட்டணம் கேட்டு நோட்டீஸ்; கப்பலுாரில் வாகன ஓட்டிகள் ஆர்ப்பாட்டம் ரூ.12 லட்சம் டோல்கேட் கட்டணம் கேட்டு நோட்டீஸ்; கப்பலுாரில் வாகன ஓட்டிகள் ஆர்ப்பாட்டம்
ரூ.12 லட்சம் டோல்கேட் கட்டணம் கேட்டு நோட்டீஸ்; கப்பலுாரில் வாகன ஓட்டிகள் ஆர்ப்பாட்டம்
ரூ.12 லட்சம் டோல்கேட் கட்டணம் கேட்டு நோட்டீஸ்; கப்பலுாரில் வாகன ஓட்டிகள் ஆர்ப்பாட்டம்
ரூ.12 லட்சம் டோல்கேட் கட்டணம் கேட்டு நோட்டீஸ்; கப்பலுாரில் வாகன ஓட்டிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 03, 2024 05:56 AM

திருமங்கலம் : கப்பலுார் டோல்கேட்டை கடந்து சென்றதற்கு ரூ.12 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டதற்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கப்பலுார் டோல்கேட் விதிமுறை மீறி அமைக்கப்பட்டுள்ளதாகவும், உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் கேட்டு நிர்வாகம் பிரச்னை செய்வதாகவும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
போராடும்போது மட்டும் டோல்கேட் நிர்வாகம் கட்டணம் வசூலிப்பதில்லை.
அவ்வாறு இலவசமாக கடந்து செல்லும் வாகனங்களை கணக்கிட்டு மொத்தமாக லட்சக்கணக்கில் பணம் செலுத்த கோரி நோட்டீஸ் அனுப்புவதும் வழக்கம்.
கடந்த 10 ஆண்டுகளில் தற்போது 4வது முறையாக திருமங்கலம் பகுதி வாகனங்களுக்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை கட்டணம் செலுத்தகோரி டோல்கேட் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.
இதை கண்டித்து நேற்று டோல்கேட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவினர் மற்றும் கப்பலுார் சிட்கோ தொழிலதிபர்கள் சங்க நிர்வாகிகள் டோல்கேட் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரசத்தை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
தடுப்புக்கு எதிர்ப்பு
நேற்று திருமங்கலத்தில் இருந்து உச்சபட்டிக்கு செல்லும் ரோட்டில் விபத்தை காரணம் காட்டி நான்குவழிச் சாலை நடுவில் தடுப்பு ஏற்படுத்த டோல்கேட் நிர்வாகம் முயற்சித்தது.
பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் அந்த முயற்சியை கைவிட்டது.