மருத்துவமனையில் பாதுகாப்பற்ற சுவர்
மருத்துவமனையில் பாதுகாப்பற்ற சுவர்
மருத்துவமனையில் பாதுகாப்பற்ற சுவர்
ADDED : ஜூன் 23, 2024 04:15 AM

சோழவந்தான்: சோழவந்தான் அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
இந்த மருத்துவமனையின் நுழைவாயில் பகுதியில் உள்ள மரம் வளர்ந்து, விரிவடைந்து சுற்றுச்சுவர் மீது சாய்ந்துள்ளது. இதனால் சுவரில் ஏற்பட்ட விரிசல் பெரிதாகி வருகிறது. மருத்துவமனைக்கு தினமும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.
வாகனங்களை இந்த சுவர் முன்பு நிறுத்துகின்றனர். அவசர சிகிச்சைக்கு வாகனங்களில் அழைத்து வருவதும் இவ்வழியாகத்தான்.
சுவரில் விரிசல் ஏற்பட்டு எப்போது விழுமோ என்ற நிலையில், ஆபத்தை அறியாத பொதுமக்கள் அதன் அருகிலேயே காத்திருக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன் இப்பகுதி சந்தை நுழைவாயிலில் மரக்கிளை முறிந்து விழுந்து பூ வியாபாரி இறந்தார். மேலும் விபரீதம் ஏற்படும் முன் அபாய சுவரை அகற்றி புதிய சுவர் அமைக்க வேண்டும்.