/உள்ளூர் செய்திகள்/மதுரை/ திண்டுக்கல்லில் '‛இரட்டை இலை' 4.43 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி l 6.70 லட்சம் ஓட்டுக்கள் பெற்று மா.கம்யூ., சாதனை l பா.ம.க., திலகபாமா டிபாசிட் இழந்தார் திண்டுக்கல்லில் '‛இரட்டை இலை' 4.43 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி l 6.70 லட்சம் ஓட்டுக்கள் பெற்று மா.கம்யூ., சாதனை l பா.ம.க., திலகபாமா டிபாசிட் இழந்தார்
திண்டுக்கல்லில் '‛இரட்டை இலை' 4.43 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி l 6.70 லட்சம் ஓட்டுக்கள் பெற்று மா.கம்யூ., சாதனை l பா.ம.க., திலகபாமா டிபாசிட் இழந்தார்
திண்டுக்கல்லில் '‛இரட்டை இலை' 4.43 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி l 6.70 லட்சம் ஓட்டுக்கள் பெற்று மா.கம்யூ., சாதனை l பா.ம.க., திலகபாமா டிபாசிட் இழந்தார்
திண்டுக்கல்லில் '‛இரட்டை இலை' 4.43 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி l 6.70 லட்சம் ஓட்டுக்கள் பெற்று மா.கம்யூ., சாதனை l பா.ம.க., திலகபாமா டிபாசிட் இழந்தார்
ADDED : ஜூன் 05, 2024 12:05 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் தொகுதியில் மா.கம்யூ., வேட்பாளர் சச்சிதானந்தம் 4,43,821 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அ.தி.மு.க., கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ., வேட்பாளர் முகமது முபாரக் மா.கம்யூ., பெற்ற ஒட்டுக்களில் மூன்றில் ஒரு பங்கான 2,26,328 ஓட்டுக்களையே பெற முடிந்தது.
பா.ஜ., கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க., வேட்பாளர் திலகபாமா டிபாசிட் இழந்தார்.
ஒட்டு எண்ணிக்கை தொடக்கம் முதலே மா.கம்யூ., வேட்பாளர்சச்சிதானந்தம் முன்னிலைப் பெற்று வந்தார். 26 சுற்றுகளாக நடந்த ஓட்டு எண்ணிக்கை இறுதியில் தபால் ஓட்டுக்களை சேர்த்து மா.கம்யூ., சச்சிதானந்தம் 6,70,149, அ.தி.மு.க., கூட்டணி எஸ்.டி.பி.ஐ., முகமதுமுபாரக்2,26,328, பா.ஜ., கூட்டணி பா.ம.க., திலகபாமா 1,12,503, நாம் தமிழர் கட்சி கயிலை ராஜன் 97,845 ஓட்டுக்களை பெற்றனர். இதில் மா.கம்யூ., சச்சிதானந்தம் 4,43,821 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.நோட்டாவிற்கு 22,120 ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன. இது தவிர பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த நாச்சிமுத்து 4,231, சுயேச்சைகளாக போட்டியிட்ட தினேஷ்குமார் 2,434, அங்குசாமி 1,290, அன்புரோஸ் 1,012, ஆறுமுகம் 1,089, சதீஷ் கண்ணா 926, சபரிநாத் 1,011, சுரேஷ் 1,257, பழனிசாமி 948, முருகேஷன் 2,008, ராஜ்குமார் 4,416 ஓட்டுக்களை பெற்றனர்.
இங்கு அ.தி.மு.க., கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ., வேட்பாளர் முகமது முபாரக் மா.கம்யூ., பெற்ற ஓட்டுக்களில் மூன்றில் ஒரு பங்கான 2,26,328 ஓட்டுக்களையே பெற முடிந்தது.2019 லோக்சபா தேர்தலில் இதே தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்ட வேலுச்சாமி 5,38,972 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட மா.கம்யூ., வேட்பாளர் சச்சிதானந்தம் 4,43,821 ஓட்டுக்கள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர் துவங்கி முதன்முதலாக இரட்டை இலை சின்னத்தில் திண்டுக்கல் இடைத்தேர்தலை சந்தித்து அபார வெற்றி பெற்றார். தற்போது இந்த தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டும் எஸ்.டி.பி.ஐ., வேட்பாளர் படுதோல்வி அடைந்துள்ளார்.
தபால் ஓட்டுக்கள் நீக்கம்
திண்டுக்கல் தொகுதியில் 7271 தபால் ஓட்டுக்கள் பதிவானதில் உரிய சான்றுகள் இணைக்கப்படாத 250 ஓட்டுக்கள்தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் ஒட்டு எண்ணிக்கையின் போது முறையாக பதிவு செய்யப்படாத 574 ஓட்டுக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.
மா.கம்யூ., சச்சிதானந்தம் 2758, எஸ்.டி.பி.ஐ., முகமது முபாரக்836, பா.ம.க.,திலகபாமா 1490 , நாம் தமிழர் கட்சி கயிலை ராஜன் 954 ஓட்டுக்கள் பெற்றதோடு, நோட்டாவுக்கு 260 ஓட்டுக்கள் பதிவானது.