Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சிவகங்கையில் 2வது முறையாக காங்., வேட்பாளர் கார்த்தி வெற்றி; கடந்த முறையை விட ஓட்டு குறைந்தது

சிவகங்கையில் 2வது முறையாக காங்., வேட்பாளர் கார்த்தி வெற்றி; கடந்த முறையை விட ஓட்டு குறைந்தது

சிவகங்கையில் 2வது முறையாக காங்., வேட்பாளர் கார்த்தி வெற்றி; கடந்த முறையை விட ஓட்டு குறைந்தது

சிவகங்கையில் 2வது முறையாக காங்., வேட்பாளர் கார்த்தி வெற்றி; கடந்த முறையை விட ஓட்டு குறைந்தது

ADDED : ஜூன் 05, 2024 12:08 AM


Google News
Latest Tamil News
சிவகங்கை : சிவகங்கை லோக்சபா தொகுதியில் காங்.,வேட்பாளர் கார்த்தி 4,27,677 ஓட்டுகள் பெற்று 2வது முறையாக வெற்றி பெற்றுஉள்ளார். கடந்த 2019 தேர்தலில் 3,32,244 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை 2,05,664 ஓட்டு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றார்.

அ.தி.மு.க., வேட்பாளர் சேவியர் தாஸ் 2,20,997 ஓட்டுக்கள் பெற்று 2வதுஇடத்தை பிடித்தார். பா.ஜ., ஆதரவு பெற்ற இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக வேட்பாளர் தேவநாதன் 1,95,788 ஓட்டுக்களை பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.

நாம் தமிழர் வேட்பாளர் எழிலரசி 1,63,412 ஓட்டுக்கள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர், 16 சுயேச்சைகள் டெபாசிட் இழந்தனர்.

தபால் ஓட்டுக்கள்


அரசு ஊழியர், ராணுவ வீரர்கள்,முதியோர் என 6793 பேர் தபால் ஓட்டளித்தனர்.இதில்1732 ஓட்டுக்கள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.5061 தபால் ஓட்டுக்கள் செல்லுபடி ஆனது.

விதிமுறையை மீறி புதுக்கோட்டையைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் அலைபேசி மூலம் ஓட்டு எண்ணும் மையத்தில் படம் பிடித்துக் கொண்டிருந்தார். இதை அறிந்த கலெக்டர் ஆஷா அஜித் அவரது அலைபேசியை பறிமுதல் செய்து எழுதி வாங்கிவிட்டு அவரிடமே ஒப்படைத்தார்.

திருமயம், திருப்புத்துார் தொகுதியில் தலா ஒரு மிஷின் பழுதானது. இதை பெங்களூருவை சேர்ந்த இன்ஜினியர்கள் சரி செய்ய முயற்சித்தும் அந்த மிஷினில் பதிவான ஓட்டுக்கள் எண்ணிக்கைக்கு எடுக்கப்படவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us