தேனியில் தி.மு.க., வேட்பாளர் வெற்றி
தேனியில் தி.மு.க., வேட்பாளர் வெற்றி
தேனியில் தி.மு.க., வேட்பாளர் வெற்றி
ADDED : ஜூன் 05, 2024 12:15 AM

தேனி,: தேனி லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் 5 லட்சத்து 71 ஆயிரத்து 493 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார்.
இத்தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலில் 11 லட்சத்து 41 ஆயிரத்து 219 ஓட்டுக்கள் பதிவானது.
பா.ஜ., கூட்டணியில் போட்டியிட்ட அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் 2 லட்சத்து 92 ஆயிரத்து 668 ஓட்டுக்கள் பெற்றார்.அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 587 ஓட்டுக்கள் பெற்றார்.
நாம்தமிழர் கட்சி மதன் 76,834 ஓட்டுக்கள் பெற்றனர். 11,336 பேர் 'நோட்டா'வுக்கு ஓட்டுப்பதிவு செய்தனர். பகுஜன்சமாஜ் கட்சி, சுயேச்சைகள் குறைந்த அளவு ஓட்டுக்கள் பெற்றனர்
தி.மு.க., வேட்பாளர்தங்க தமிழ்செல்வனுக்குதேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கினார். பொது பார்வையாளர் கவுரங் பாய் மக்வானா, எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், சரவணக்குமார், மகாராஜன் கலந்து கொண்டனர்.