/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை ஜெயின் வித்யாலயாவில் ஜூலை 21ல் உயர்கல்வி கண்காட்சி மதுரை ஜெயின் வித்யாலயாவில் ஜூலை 21ல் உயர்கல்வி கண்காட்சி
மதுரை ஜெயின் வித்யாலயாவில் ஜூலை 21ல் உயர்கல்வி கண்காட்சி
மதுரை ஜெயின் வித்யாலயாவில் ஜூலை 21ல் உயர்கல்வி கண்காட்சி
மதுரை ஜெயின் வித்யாலயாவில் ஜூலை 21ல் உயர்கல்வி கண்காட்சி
ADDED : ஜூலை 19, 2024 05:48 AM
மதுரை : மதுரை ஜெயின் வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் உயர் கல்வி தொடர்பான கல்விக் கண்காட்சி ஜூலை 21 (ஞாயிறு) காலை 10:00 மணி முதல் மாலை 3:30 மணி வரை நடக்கிறது.
நாடு முழுவதிலும் இருந்து 25க்கும் மேற்பட்ட முன்னணி பல்கலைகள், சிறந்த கல்லுாரிகள், வெளிநாட்டு பல்கலைகள் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றன. ஒன்பது முதல் பிளஸ் 2 வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இந்நிகழ்ச்சி ஏற்றது. உயர்கல்வி கனவில் உள்ள மாணவர்கள், கல்வியாளர்கள், பல்கலை பிரதிநிதிகளை நேருக்கு நேர் சந்தித்து கல்வி ஆலோசனை பெறலாம்.
மாணவர்களுக்கு ஏற்ற படிப்புகள், முன்னுரிமை, சலுகைகள் பற்றி அறிய உதவும்.
தகுதி, மற்றும் விருப்பம் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டிய படிப்புகள் குறித்த ஆலோசனைகளை கல்வியாளர்கள் வழங்குவர். பல்கலைகளில் அளிக்கப்படும் உதவித் தொகைகள், படிப்புகள் குறித்தும் ஏராளமான தகவல்கள் கிடைக்கும்.
இதன் மூலம் மாணவர்கள், பெற்றோர் உரிய முடிவுகளை எடுக்க இயலும். கண்காட்சியை பார்வையிட கட்டணம் இல்லை. மாணவர்களுக்கு தேவையான பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.
மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இந்நிகழ்ச்சி இருக்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.