/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்சூரன்ஸ் பணத்திற்காக தாத்தாவை கொன்ற பேரன்கள் * மருமகள், பேரன்கள் கைது இன்சூரன்ஸ் பணத்திற்காக தாத்தாவை கொன்ற பேரன்கள் * மருமகள், பேரன்கள் கைது
இன்சூரன்ஸ் பணத்திற்காக தாத்தாவை கொன்ற பேரன்கள் * மருமகள், பேரன்கள் கைது
இன்சூரன்ஸ் பணத்திற்காக தாத்தாவை கொன்ற பேரன்கள் * மருமகள், பேரன்கள் கைது
இன்சூரன்ஸ் பணத்திற்காக தாத்தாவை கொன்ற பேரன்கள் * மருமகள், பேரன்கள் கைது
ADDED : ஜூன் 21, 2024 12:57 AM

மேலுார்:மதுரை மாவட்டம் மேலுார் அருகே விபத்து வழக்கில் கிடைத்த, 2 லட்சம் ரூபாயை கேட்டு முதியவரை கொலை செய்த வழக்கில் மருமகள், இரு பேரன்கள் கைது செய்யப்பட்டனர்.
கொட்டக்குடியைச் சேர்ந்தவர் பெருமாள், 68. இவரது மகன் குருமூர்த்தி, நான்கு ஆண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்தார். இவ்வழக்கில் சில நாட்களுக்கு முன் இழப்பீடு தொகையாக 17 லட்சம் ரூபாய் கிடைத்தது. இதில், 15 லட்சம் ரூபாயை குருமூர்த்தி மனைவி மல்லிகா, 38, பெயரிலும், மீதி 2 லட்சம் ரூபாயை பெருமாள் பெயரிலும் வழங்கப்பட்டது.
பெருமாளுக்கு வந்த 2 லட்சம் ரூபாயை கேட்டு மல்லிகா, பேரன்கள் மலையரசன், 21, அபிபாலன், 18, ஆகியோர் நேற்று முன்தினம் இரவு தகராறு செய்தனர். அவருக்கு வந்த பணத்தை தர மறுத்த பெருமாளை அடித்து, கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.
மூவரையும் இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு, எஸ்.ஐ., முத்துக்குமார், போலீஸ்காரர் தினேஷ் கைது செய்தனர்.