/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 14 கல்லுாரிகளில் உள்ளிருப்பு போராட்டம் 14 கல்லுாரிகளில் உள்ளிருப்பு போராட்டம்
14 கல்லுாரிகளில் உள்ளிருப்பு போராட்டம்
14 கல்லுாரிகளில் உள்ளிருப்பு போராட்டம்
14 கல்லுாரிகளில் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : ஜூன் 21, 2024 12:55 AM
மதுரை:அரசு, உதவி பெறும் கல்லுாரி, பல்கலை ஆசிரியர்களுக்கு, யு.ஜி.சி., பரிந்துரையின்படி சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டது. கோவை, தஞ்சை மண்டலங்களை தவிர மதுரை, நெல்லை உட்பட ஆறு மண்டலங்களில், அரசு உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர்களுக்கு அதன்படி சம்பளம் வழங்கப்படவில்லை.
இதை கண்டித்து மதுரையில் ஆறு கல்லுாரிகள் உட்பட திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் 14 கல்லுாரிகளில் உள்ளிருப்பு போராட்டங்கள் நேற்று துவங்கின. இதில், 300க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர். போராட்டத்திற்கான ஏற்பாடுகளை, 'மூட்டா' மாநில தலைவர் செந்தாமரைக்கண்ணன், மண்டல செயலர்கள் வில்சன் பாஸ்கர், ராபர்ட் திலீபன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
நிர்வாகிகள் கூறுகையில், 'கல்லுாரி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளத்தை உடன் வழங்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்' என்றனர்.