ADDED : ஜூன் 12, 2024 12:28 AM
மதுரை : மதுரை வேளாண் கல்லுாரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் பூந்தோட்டம் பராமரிப்பு குறித்த 27 நாட்கள் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
பூந்தோட்டம் அமைத்தல், பூந்தோட்டங்களை பராமரித்தல், நாற்றங்கால் தயாரித்தல், பராமரித்தல், புல்தரை அமைத்தல், ஒருங்கிணைந்த உரம், பூச்சி நோய் மேலாண்மை குறித்து செய்முறை பயிற்சி அளிக்கப்படும்.
30 வயதிற்குட்பட்ட ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆண், பெண்கள் ஜூன் 20 க்குள் விண்ணப்பிக்கலாம். பெயர், முகவரி விவரங்களுடன் ஆதார் எண், ஜாதிச்சான்றிதழுடன் அணுகவேண்டும்.
விவரங்களுக்கு தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் அருள் அரசுவை 93449 36897 ல் தொடர்பு கொள்ளலாம்.