/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தந்தையை பராமரிக்க தவறிய மகன் மீது வழக்கு தந்தையை பராமரிக்க தவறிய மகன் மீது வழக்கு
தந்தையை பராமரிக்க தவறிய மகன் மீது வழக்கு
தந்தையை பராமரிக்க தவறிய மகன் மீது வழக்கு
தந்தையை பராமரிக்க தவறிய மகன் மீது வழக்கு
ADDED : ஜூன் 12, 2024 12:28 AM
மதுரை : மதுரையில் சொத்துக்களை பெற்றுக் கொண்டு தந்தையை பராமரிக்க தவறிய மகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
மதுரை தெற்குவாசல் தவிட்டுச்சந்தைப் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் 83. ஓய்வு பெற்ற அரசு அலுவலர். இவருக்கு சரவணன் உட்பட இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூவருக்கும் சொத்துக்களை பிரித்துக்கொடுத்த நிலையில் ஜெயராமன் மட்டும் தனி வீட்டில் வசித்தார்.
'தான் வசிக்கும் வீட்டை மகன் சரவணன் அவரது மனைவி பெயருக்கு எழுதிவாங்கி ஏமாற்றிவிட்டார். சொத்துக்களை பெற்றுக்கொண்டு என்னை பராமரிக்க மறுக்கிறார். நான் இறக்கும் வரை அந்த வீட்டில் வசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கலெக்டர் சங்கீதாவிடம் ஜெயராமன் புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரித்து, 'அதே வீட்டில் ஜெயராமன் வசிக்க அனுமதிக்க வேண்டும். அவருக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும்' என சரவணனுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் ஜெயராமன் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சொத்துக்களை பெற்றுக்கொண்டு தந்தையை பராமரிக்க தவறியதாக சரவணன் மீது தெற்குவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.