Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நெல் வயல்களில் நீலப்பச்சை பாசி உற்பத்தி

நெல் வயல்களில் நீலப்பச்சை பாசி உற்பத்தி

நெல் வயல்களில் நீலப்பச்சை பாசி உற்பத்தி

நெல் வயல்களில் நீலப்பச்சை பாசி உற்பத்தி

ADDED : ஜூன் 12, 2024 12:28 AM


Google News
மதுரை : 'நெல் வயல்களில் நீலப்பச்சை பாசியை உற்பத்தி செய்து பயன்படுத்தினால் மகசூல் அதிகரிக்கும்' என வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: மாவட்டத்தில் 47ஆயிரம் எக்டேர் பரப்பில் நெல் சாகுபடியாகிறது. நெல் சாகுபடிக்கேற்ற பாசி வகை நுண்ணுயிர் உரம்தான் நீலப்பச்சை பாசி. காற்றில் இருக்கும் நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தி பயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது. மண்வளத்தை மேம்படுத்துகிறது.

இவற்றை வயலில் நாற்றாங்கால் முறையில் உற்பத்தி செய்யலாம். ஒரு சென்ட் அளவு பாத்தி எடுத்து உயரமான வரப்பு அமைத்து மண்ணை சேறாக்கி 3 முதல் 5 அங்குலம் நீர் கட்ட வேண்டும். அதில் 2 கிலோ சூப்பர் பாஸ்பேட் பயன்படுத்த வேண்டும். மண் அதிக அமிலத்தன்மை கொண்டிருந்தால் 200 கிராம் சுண்ணாம்பு சேர்க்க வேண்டும்.

இந்த பாத்தியில் 5 கிலோ அளவு நீலப்பச்சை பாசி கூட்டுக் கலவையை துாளாக்கி சமஅளவு தொழுஉரம், மணலுடன் கலந்து இட வேண்டும். 20 முதல் 30 நாட்களில் ஒரு சென்ட் பாத்தியில் 15 முதல் 30 கிலோ பாசி கிடைக்கும். நீர் வற்றிய பின் நிலத்தை காயவிட்டால் அடை போன்று பாசியை அறுவடை செய்து காயவைத்து சாக்குப்பையில் இரண்டாண்டுகள் வரை சேமிக்கலாம். மீண்டும் 15 நாட்கள் கழித்து இதே முறையில் உற்பத்தி செய்யலாம்.

இப்பாசிகள் நெல் வயலின் நீர்ப்பரப்பில் வளர்ந்து பரவுவதால் இதர பாசிகள் வளர்வது தடுக்கப்படும், களைகளின் வளர்ச்சியும் கட்டுப்படுத்தப்படும். இதன் மூலம் 30 கிலோ அளவு தழைச்சத்து மண்ணில் சேர்க்கப்படுவதால் விளைச்சலுடன் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும். 25 சதவீத ரசாயன உரத்தேவை குறையும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us