ADDED : ஜூன் 11, 2024 06:39 AM
மதுரை : மதுரை துரைச்சாமிநகர் மக்கள் நல சங்க பூங்கா வளாகத்தில் 'சுய மாற்றமே உலக மாற்றம்' என்ற தலைப்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.
சிம்மக்கல் பிரம்மாகுமாரிகள் அமைப்பு பொறுப்பாளர் செந்தாமரை பேசினார். மாநகராட்சி 70 வது வார்டு கவுன்சிலர் அமுதா தவமணி, தேசிய நெடுஞ்சாலைகள் தரக்கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் பாண்டியன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம், மன்னர் திருமலைநாயக்கர் கல்லுாரி செயற்குழு உறுப்பினர் மைலோ எஸ்.குருசாமி, வழக்கறிஞர் பாண்டியன் ஆகியோர் 'சுற்றுச்சூழல் துாய்மை தான் ஆரோக்கியத்திற்கு ஆதாரம்' என விளக்கினர்.
பிரம்மாகுமாரிகள் அமைப்பு ஏற்பாடுகளை செய்தது. அமைப்பைச் சேர்ந்த அமிர்தா, ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.