/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தெற்குவாசல் - வில்லாபுரம் வரை மேம்பாலம்: ரயில்வேக்கு நெடுஞ்சாலைத்துறை பரிந்துரை தெற்குவாசல் - வில்லாபுரம் வரை மேம்பாலம்: ரயில்வேக்கு நெடுஞ்சாலைத்துறை பரிந்துரை
தெற்குவாசல் - வில்லாபுரம் வரை மேம்பாலம்: ரயில்வேக்கு நெடுஞ்சாலைத்துறை பரிந்துரை
தெற்குவாசல் - வில்லாபுரம் வரை மேம்பாலம்: ரயில்வேக்கு நெடுஞ்சாலைத்துறை பரிந்துரை
தெற்குவாசல் - வில்லாபுரம் வரை மேம்பாலம்: ரயில்வேக்கு நெடுஞ்சாலைத்துறை பரிந்துரை
ADDED : ஜூன் 04, 2024 06:29 AM
மதுரை: மதுரையில் தெற்குவாசலில் இருந்து வில்லாபுரம் வரை மேம்பாலம் அமைக்க ரயில்வே துறைக்கு நெடுஞ்சாலைத்துறை பரிந்துரைத்துள்ளது.
தெற்குவாசல் முதல் ரிங்ரோடு வரை ரோடு அகலப்படுத்தும் பணிகள் தற்போது நடக்கின்றன.
இதில் அவனியாபுரம் முதல் பெருங்குடி விமான நிலையம் வரை ரோடு அகலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து ரிங்ரோடு மண்டேலா நகர் வரை மரங்கள், மின்கம்பங்கள் அகற்றப்பட உள்ளன.
வில்லாபுரம் ஆர்ச் முதல் அவனியாபுரம் பைபாஸ் ரோடு வரை ஆக்கிரமிப்புகளை அகற்ற பல முறை நடவடிக்கை எடுத்தும் மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்பு தொடர்கிறது. தெற்குவாசல் பாலம் குறுகலானதாக உள்ளதால் பாலத்தை அகலப்படுத்த நெடுஞ்சாலைத் துறையினர் முடிவு செய்தனர்.
தற்போது அதன் அருகிலேயே மற்றொரு பாலம் கட்ட முடிவெடுத்துள்ளனர். இதற்காக அப்பகுதி கட்டடம், நிலங்களை கையகப்படுத்துவது குறித்து ஆலோசித்துள்ளனர்.
தெற்குவாசல் சந்திப்பிலிருந்து வில்லாபுரம் வரை புதிய மேம்பாலம் அமைக்க ரயில்வே துறைக்கு நெடுஞ்சாலைத்துறை பரிந்துரைத்துள்ளது.