ADDED : ஜூன் 04, 2024 06:29 AM

மதுரை:
முல்லைப்பெரியாறு அணைக்கு மாற்றாக கேரள அரசு புதிய அணை கட்டக்கூடாது என்பதை தமிழக அரசு வலியுறுத்தும் வகையில் மதுரையில் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். செயலாளர்கள் முருகன், ரவி, துணைத்தலைவர்கள் பாலகிருஷ்ணன், மச்சேஸ்வரன், துணைச்செயலாளர் அய்யனார் முன்னிலை வகித்தனர். மதுரை உட்பட தென் மாவட்ட விவசாய சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். மதுரை தல்லாகுளம் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு அருகிலுள்ள பொதுப்பணித்துறை வளாகத்தை முற்றுகையிட திட்டமிட்டனர். போலீசார் தடுத்ததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.