ADDED : ஜூன் 04, 2024 06:29 AM
மதுரை: மதுரை மாவட்டத்தில் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் சிறப்பு முகாம் ஜூன் 29 ல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது.
செஷயா ஹோம்ஸ் தலைவர் வாசுதேவன், ரியாக்ட் அறக்கட்டளை நிறுவனர் ரமேஷ் துரைகண்ணன் தலைமை வகித்தனர். மனிதவள ஆலோசகர் செல்வராஜ் முகாம் ஏற்பாடுகள் குறித்து விளக்கினார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக பிரதிநிதிகள் வெங்கடசுப்பிரமணியம், செந்தில்குமார் உட்பட தொழில் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஹோம்ஸ் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சிவரஞ்சனி ஒருங்கிணைத்தனர்.