/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஜூன் 8 முதல் தொடர் வேலை நிறுத்தம் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஜூன் 8 முதல் தொடர் வேலை நிறுத்தம்
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஜூன் 8 முதல் தொடர் வேலை நிறுத்தம்
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஜூன் 8 முதல் தொடர் வேலை நிறுத்தம்
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஜூன் 8 முதல் தொடர் வேலை நிறுத்தம்
ADDED : ஜூன் 04, 2024 06:28 AM
உசிலம்பட்டி : தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் (டாக்பியா) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உசிலம்பட்டியில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் ராஜா தலைமை வகித்தார். இணைச் செயலாளர் நீதிமுத்தையா, உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஒன்றிய நிர்வாகிகள் மகேந்திரன், ஜெயா, ராமர், முருகன், அன்பழகன், ஜெயம், ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ரேஷன் பொருட்களை எடை குறைவாக வழங்கக்கூடாது. விற்பனையாளர்களை பொருட்களை எடுத்து செல்லும் பணியில் ஈடுபடுத்தி ஊழலுக்கு பொறுப்பாக்க கூடாது. லோடுமேன்களுக்கு பணம் கொடுக்க வற்புறுத்தக்கூடாது.
பெண் பணியாளர்களுக்கு கழிப்பறை வசதி வேண்டும். பி.ஓ.எஸ்., இயந்திரம் பழுதிற்கு விற்பனையாளரை பொறுப்பேற்க வைக்கக்கூடாது என வலியுறுத்தினர். கோரிக்கைகளை நிறைவேற்றாதபட்சத்தில் ஜூன் 8 முதல் தொடர் வேலைநிறுத்தம் நடக்கும் என்றனர்.