ADDED : ஜூலை 07, 2024 02:22 AM
மதுரை: சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மதுரை கலெக்டர் அலுவலகம் முன் விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வடக்கு மாவட்ட செயலாளர் சுடர்மொழி தீபம் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் எல்லாளன், மாவட்ட முன்னாள் செயலாளர் இன்குலாப், நிர்வாகிகள் அய்யங்காளை, அரசு முத்துப்பாண்டியன், ரவிக்குமார், மணியரசு, ராம்குமார் பாண்டியன், மாதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.