ADDED : ஜூலை 07, 2024 02:21 AM
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோயிலில் சன்மார்க சங்க கூட்டம் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது. செயலாளர் நல்லுச்சாமி முன்னிலை வகித்தார்.
நிர்வாகி சாந்தி அகல்விளக்கு ஏற்றினார். அகவல் பாராயணம் படிக்கப்பட்டது. பேராசிரியர் முத்தையா 'ஆன்மநேயம்' என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார். ஜோதி வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இணைச் செயலாளர் நாகையா நன்றி கூறினார்.