ADDED : ஜூலை 07, 2024 02:23 AM

மதுரை: மதுரையில் அரசு உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்புகள்(மூட்டா) சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. தலைவர் செந்தாமரைக்கண்ணன் தலைமை வகித்தார். மண்டல பொருளாளர் பிரபாகரன் வரவேற்றார்.
மண்டல தலைவர் ஞானேஸ்வரன் முன்னிலை வகித்தார். 4 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணி மேம்பாடு ஊதியம், நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்.இல்லாதபட்சத்தில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என நிர்வாகிகள் அறிவித்தனர். மண்டல செயலாளர்கள் ராபர்ட் திலீபன், வில்சன் பாஸ்கர், மூட்டா துணைத் தலைவர் பெரியசாமி பங்கேற்றனர்.