/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதம் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதம்
பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதம்
பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதம்
பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதம்
ADDED : ஜூலை 21, 2024 05:13 AM

திருமங்கலம்: திருமங்கலம் தாலுகா மேல உரப்பனூரில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த பள்ளியில் தற்போது 200க்கும்மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 12 ஆசிரியர்கள் வேலை செய்து வருகின்றனர். பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இதன் அருகேயே மழை நீர் வடிகால் வாய்க்கால் உள்ளது. மழைகாலங்களில் இந்த வாய்க்காலில் தண்ணீர் செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று பள்ளியின் முன்புறமுள்ள பகுதியில் சுற்றுச்சுவர் 50 அடிக்கு திடீரென இடிந்து விழுந்தது.
அப்போது மாணவர்கள் யாரும் இல்லை. அந்த பகுதியில் பலத்த சூறாவளி காற்றுவீசியதால் சுற்றுசுவர் இடிந்து விழுந்தது தெரிந்தது.