Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மானியத்தில் தென்னங்கன்றுகள்

மானியத்தில் தென்னங்கன்றுகள்

மானியத்தில் தென்னங்கன்றுகள்

மானியத்தில் தென்னங்கன்றுகள்

ADDED : ஜூன் 22, 2024 05:24 AM


Google News
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வட்டார விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை மூலம் முழு மானியத்தில் தென்னங்கன்றுகள், இடுபொருட்கள், உயிர் உரங்கள் வழங்கப்பட உள்ளன.

தென்னை நடவு செய்ய விரும்புவோருக்கும், ஏற்கனவே நடவு செய்தவர்களுக்கும் எக்டேருக்கு ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள இடுபொருட்கள் மானியமாக வழங்கப்பட உள்ளன. உழவன் செயலி மூலம் அல்லது பட்டா, சிட்டா, ஆதார் நகல்களுடன் திருப்பரங்குன்றம் தோட்டக்கலை அலுவலகத்தில் முன்பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு திருப்பரங்குன்றம், வலையங்குளம் பகுதிக்கு உதவி தோட்டக்கலை அலுவலர் ஆறுமுகம் 99941 41379, நாகமலை புதுக்கோட்டை, மதுரை மேற்கு ஜெயபாலன் 86678 79177, அவனியாபுரம், மதுரை கிழக்கு, விராதனுார் பேபி ஷாலினியை 63691 48798ல் தொடர்பு கொள்ளலாம் என உதவி இயக்குனர் கோகிலா சக்தி தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us