/உள்ளூர் செய்திகள்/மதுரை/ டாக்டர்களை நியமிக்க வழக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு உயர்நீதிமன்றம் உத்தரவு டாக்டர்களை நியமிக்க வழக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு உயர்நீதிமன்றம் உத்தரவு
டாக்டர்களை நியமிக்க வழக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு உயர்நீதிமன்றம் உத்தரவு
டாக்டர்களை நியமிக்க வழக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு உயர்நீதிமன்றம் உத்தரவு
டாக்டர்களை நியமிக்க வழக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூன் 04, 2024 11:58 PM
மதுரை, : ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சைக்கு டாக்டர்களை நியமிக்கக் கோரிய மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தொண்டி கலந்தர் ஆசிக் அகமது தாக்கல் செய்த பொதுநல மனு:
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை 1964 ல் துவக்கப்பட்டது. அது 2021 ல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. தலைக்காய சிகிச்சைக்கு சிறப்பு டாக்டர்கள் இல்லை. விபத்தில் தலையில் காயமடைவோர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆம்புலன்ஸில் கொண்டுவரும்போது ரத்தம் வெளியேறி அல்லது மருத்துவமனையில் சேர்ந்த சில நாட்களில் இறக்கின்றனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சை, நரம்பியல் டாக்டர்களை நியமிக்கக்கோரி தமிழக சுகாதாரத்துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்குனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: மனுவை அதிகாரிகள் 2 மாதங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.