/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்னும் அதிக முனைப்புடன் உழைப்பேன்: கார்த்தி பேட்டி இன்னும் அதிக முனைப்புடன் உழைப்பேன்: கார்த்தி பேட்டி
இன்னும் அதிக முனைப்புடன் உழைப்பேன்: கார்த்தி பேட்டி
இன்னும் அதிக முனைப்புடன் உழைப்பேன்: கார்த்தி பேட்டி
இன்னும் அதிக முனைப்புடன் உழைப்பேன்: கார்த்தி பேட்டி
ADDED : ஜூன் 04, 2024 11:57 PM
காரைக்குடி, : கடந்த 5 ஆண்டுகளை விட இன்னும் அதிகமான முனைப்புடன் உழைப்பேன்' என சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்ற காங்., வேட்பாளர் கார்த்தி தெரிவித்தார்.
கார்த்திக்கு கலெக்டர் ஆஷா அஜித் வெற்றி சான்றிதழை வழங்கினார்.
இதில் அமைச்சர்கள் பெரியகருப்பன், ரகுபதி, முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் எம்.எல்.ஏ.,க்கள் மாங்குடி, தமிழரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கார்த்தி கூறியதாவது:
தமிழகத்தில் இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்றே கருதுகிறேன்.
தமிழகத்தில் 40 க்கு 40 வெற்றி பெற ஒற்றுமையாக செயல்பட்ட அத்தனை கூட்டணிக் கட்சிகளுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி.
கடந்த 5 ஆண்டுகளில் உழைத்ததை விட இன்னும் அதிகமான முனைப்புடன் உழைப்பேன் என்றார்.