/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தண்ணீர் இருந்தும் விவசாயம் செய்ய முடியவில்லை: விவசாயிகள் கண்ணீர் தண்ணீர் இருந்தும் விவசாயம் செய்ய முடியவில்லை: விவசாயிகள் கண்ணீர்
தண்ணீர் இருந்தும் விவசாயம் செய்ய முடியவில்லை: விவசாயிகள் கண்ணீர்
தண்ணீர் இருந்தும் விவசாயம் செய்ய முடியவில்லை: விவசாயிகள் கண்ணீர்
தண்ணீர் இருந்தும் விவசாயம் செய்ய முடியவில்லை: விவசாயிகள் கண்ணீர்
ADDED : ஜூன் 26, 2024 07:17 AM
திருப்பரங்குன்றம்: 'திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் தண்ணீர் இருந்தும் மடைகள் சேதமடைந்துள்ளதால் விவசாயம் செய்ய முடியவில்லை' என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாசில்தார் அனிஸ் சத்தார் தலைமையில் நடந்தது. துணை தாசில்தார்கள் புவனேஸ்வரி, பாலகுமார் முன்னிலை வகித்தனர்.
விவசாயிகளின் பேசியதாவது:
லட்சுமணன்: 3 மாதங்களுக்கு பிறகு கூட்டம் நடக்கிறது. சரியான தகவல் தெரிவிக்காததால் 7 பேர் மட்டுமே வந்துள்ளோம். நிலையூர் பெரிய கண்மாய்க்கு மழை நீர் செல்வதற்காக மெயின்ரோட்டில் முல்லை நகர் பகுதியிலுள்ள தரைப்பாலத்தை ஒட்டி கட்டடங்கள் உள்ளன. கண்மாய்க்கு தண்ணீர் செல்ல வழி உள்ளதா.
விவேகானந்தன்: மாடக்குளம் கண்மாயிலிருந்து வெளியேறும் உபரி நீர் கால்வாய் பகுதியை தனியார் ஆக்கிரமித்துள்ளதால் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கிறது.
மாரிச்சாமி, மகேந்திரன்: திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய சாலை அமைக்கப்படுகிறது. கண்மாயிலிருந்து விவசாயத்திற்கு தண்ணீர் வெளியேறும் இரண்டு மற்றும் மூன்றாம் மடை பகுதிகளை, சாலை அமைப்பவர்கள் சேதப்படுத்தி விட்டனர். தண்ணீர் வெளியேற முடியவில்லை. இதனால் கடந்த ஆண்டு விவசாயம் முற்றிலும் தடைப்பட்டது. இந்த ஆண்டு விவசாயம் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இக்கண்மாய் தண்ணீரை நம்பி உள்ள விவசாயிகள் மிகுந்த சிரமம் அடைகின்றோம். மடைகளை சீரமைக்க உடனடி நடவடிக்கை தேவை. இதுபோன்று கண்மாயில் சாலை அமைக்கும்போது மடைப்பகுதிகளை முதலில் சீரமைத்த பின்புதான் சாலை அமைக்க வேண்டும். ஆனால் இங்கு அந்த விதிமுறை பின்பற்றவில்லை.
சிவராமன்: தென்பழஞ்சி கண்மாய்க்கு மழை நீர் வரும் கால்வாய்கள் அனைத்தும் பருவமழை துவங்குவதற்கு முன்பாக சீரமைக்கப்பட வேண்டும் என்றனர்.