/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பணிக்கால பலன்கள் வழங்ககோரி பஸ் ஊழியர்கள் உண்ணாவிரதம் பணிக்கால பலன்கள் வழங்ககோரி பஸ் ஊழியர்கள் உண்ணாவிரதம்
பணிக்கால பலன்கள் வழங்ககோரி பஸ் ஊழியர்கள் உண்ணாவிரதம்
பணிக்கால பலன்கள் வழங்ககோரி பஸ் ஊழியர்கள் உண்ணாவிரதம்
பணிக்கால பலன்கள் வழங்ககோரி பஸ் ஊழியர்கள் உண்ணாவிரதம்
ADDED : ஜூன் 26, 2024 07:17 AM
மதுரை: அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம் சார்பில் பைபாஸ் ரோடு மண்டல தலைமை அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் உண்ணாவிரதம் நேற்றுமுன்தினம் தொடங்கினர்.
தலைவர் அழகர்சாமி தலைமை வகித்தார். சி.ஐ.டி.யூ., நகர் செயலாளர் லெனின் துவக்கி வைத்தார்.
வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகைக்கான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும். ஓய்வூதியர்களின் 104 மாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். 2022 டிசம்பர் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு நிறுத்திவைக்கப்பட்ட பணிக்கால பலன்களை வழங்க வேண்டும்.
குறைந்தபட்ச ஓய்வூதியத்தை முறைப்படுத்துதல், ஒப்பந்த முறையை கைவிட்டு காலிப்பணியிடங்களை நிரப்புதல், வாரிசுகளுக்கு வேலை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. நேற்று (ஜூன் 25) சி.ஐ.டி.யூ., துணைத்தலைவர் ராஜேந்திரன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
அரசு விரைவுப் போக்குவரத்து பணிமனை முன்பும் சி.ஐ.டி.யூ., மதுரை பணிமனைத் தலைவர் லட்சுமணப்பெருமாள் தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர்.
முன்னாள் தலைவர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். மண்டல பொதுச் செயலாளர் கனகசுந்தர் துவக்கி வைத்தார். அரசுப் போக்குவரத்து சம்மேளன உதவித் தலைவர் பிச்சை உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.