ADDED : ஜூன் 26, 2024 07:17 AM
திருப்பரங்குன்றம்: மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல கவுன்சிலர்கள் கூட்டம் திருப்பரங்குன்றம் அலுவலகத்தில் நடந்தது.
மண்டல தலைவர் சுவிதா தலைமை வகித்தார். உதவி கமிஷனர் ராதா முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண கோரிக்கை வைத்தனர். விரைவில் நிறைவேற்றப்படும் என சுவிதா தெரிவித்தார்.