ADDED : ஜூன் 29, 2024 04:57 AM
மதுரை, : பாரதி யுவ கேந்திரா சார்பில் கல்வி, இசை, விளையாட்டு, சமூகப்பணி உள்ளிட்ட துறைகளில் சாதித்த பள்ளி மாணவர்கள் யுவஸ்ரீ கலா பாரதி விருதுக்கும், கல்லுாரி மாணவர்கள் சுவாமி விவேகானந்தர் விருதுக்கும் விண்ணப்பிக்கலாம்.
தங்கள் முகவரி, அலைபேசி எண், சான்றுகளுடன் 'நெல்லை பாலு, நிறுவனர், பாரதி யுவ கேந்திரா, ஜி-102, சாந்தி சதன் குடியிருப்பு, கோச்சடை, மதுரை - 625 016' என்ற முகவரிக்கு ரூ.10 ஸ்டாம்ப் ஒட்டிய சுயவிலாச கவருடன் அனுப்ப வேண்டும். பொதுத் தேர்வில் 80 சதவீதத்திற்கு மேல் பெற்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
கோவை ஆர்ஷ வித்யா பீடம் சுவாமி ததேவானந்த சரஸ்வதி விருது வழங்க உள்ளார்.