ஆலைக்குள் புகுந்து ஊழியர் படுகொலை
ஆலைக்குள் புகுந்து ஊழியர் படுகொலை
ஆலைக்குள் புகுந்து ஊழியர் படுகொலை
ADDED : ஜூன் 29, 2024 05:41 AM
மேச்சேரி, : சேலம் மாவட்டம் மேச்சேரி, எம்.என்.பட்டி ஊராட்சி அரங்கனுாரில், பிளாஸ்டிக் பொருட்களை உருக்கி, பிற பொருட்களை தயாரிக்கும் ஆலை உள்ளது.
கருப்பூரை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ், 25, பணிபுரிந்தார். திருமணம் ஆகாதவர். நேற்று காலை ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்தார். காலை, 11:00 மணிக்கு வந்த மர்ம நபர், சுபாஷ் சந்திர போஸை, கத்தியால் கொடூரமாக பல இடங்களில் வெட்டியதில், சம்பவ இடத்தில் பலியானார்.
மேட்டூர் டி.எஸ்.பி., ஆரோக்யராஜ் உள்ளிட்ட போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். பட்டப்பகலில் ஆலைக்குள் புகுந்து, தொழிலாளியை கொன்ற ஆசாமியை தேடி வருகின்றனர்.