ADDED : ஜூன் 30, 2024 04:57 AM
திருமங்கலம் : திருமங்கலம் 27 வார்டுகளுக்கும் 15 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. தவிர தெருவிளக்கு, சாக்கடை பிரச்னை குறித்தும் நகராட்சி கமிஷனர் அசோக்குமாரிடம் அ.தி.மு.க., நகர் செயலாளர் விஜயன் தலைமையில் புகார் அளிக்கப்பட்டது.
கமிஷனர் இதுகுறித்து முறையாக பதில் தெரிவிக்காத நிலையில் அவரை முற்றுகையிட்டனர். அவரது அறையில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலைக்குள் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்வதாக கமிஷனர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.