/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரையில் 65 பவுன் நகைக்காக நடந்த மூதாட்டி கொலையில் திருப்பம்; கள்ளக்காதலனுடன் மருமகள் கைது மதுரையில் 65 பவுன் நகைக்காக நடந்த மூதாட்டி கொலையில் திருப்பம்; கள்ளக்காதலனுடன் மருமகள் கைது
மதுரையில் 65 பவுன் நகைக்காக நடந்த மூதாட்டி கொலையில் திருப்பம்; கள்ளக்காதலனுடன் மருமகள் கைது
மதுரையில் 65 பவுன் நகைக்காக நடந்த மூதாட்டி கொலையில் திருப்பம்; கள்ளக்காதலனுடன் மருமகள் கைது
மதுரையில் 65 பவுன் நகைக்காக நடந்த மூதாட்டி கொலையில் திருப்பம்; கள்ளக்காதலனுடன் மருமகள் கைது
ADDED : ஜூலை 20, 2024 02:59 AM

திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மூதாட்டியை கொலை செய்து 65 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக கள்ளக்காதலனுடன் மருமகள் கைது செய்யப்பட்டார். கள்ளத்தொடர்பை கண்டித்ததால் கொலை செய்துவிட்டு நகைக்காக நடந்தது போல் திசை திருப்ப முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருமங்கலம் தாலுகா பெரிய வாகைக்குளம் மாயோன் நகர் தங்கராஜ் மனைவி காசம்மாள் 70. இவர்களது மகன்கள் பாண்டியராஜன், பரசுராமன் மஹாராஷ்டிராவில் முறுக்கு வியாபாரம் செய்கின்றனர். தங்கராஜ் டூவீலர் விபத்தில் சிக்கி மதுரை ராஜம்பாடியில் உள்ள மகள் பாண்டியம்மாள் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இதனால் மாயோன் நகரில் காசம்மாள் மட்டும் வசித்து வந்த நிலையில், ஜூலை 8ல் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த 15 பவுன் நகைகள், வீட்டில் இருந்த 50 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. நகைக்காக கொலை நடந்ததாக சிந்துபட்டி போலீசார் விசாரணையை துவக்கினர்.
இந்நிலையில் கள்ளத்தொடர்பை கண்டித்ததால் மூதாட்டியை கொலை செய்ததாக அவரது மருமகளான பரசுராமன் மனைவி சுதா 45, கள்ளக்காதலன் ராஜம்பாடி கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர் பாக்கியராஜ் 34, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரை தென்மண்டல ஐ.ஜி., பிரேம்ஆனந்த் சின்ஹா, மாவட்ட எஸ்.பி., அரவிந்த் பாராட்டினர்.
அவமானத்தால் கொலை
போலீசார் கூறியதாவது:
கேபிள் 'டிவி' லைன் பராமரிப்பிற்காக வந்த பாக்கியராஜூடன் சுதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதை காசம்மாள் கண்டித்தார். ஆனாலும் தொடர்பு நீடித்ததால் சுதாவின் நடத்தை குறித்து அப்பகுதி மக்களிடம் காசம்மாள் சொல்ல ஆரம்பித்தார்.
இதை அவமானமாக கருதிய சுதா, கள்ளக்காதலனுடன் சேர்ந்து காசம்மாளை கொலை செய்தார். சம்பவம் நடந்த அன்றே குடும்ப உறுப்பினர்களின் அலைபேசிகளை ஆய்வு செய்தபோது, சுதாவுடன் பாக்கியராஜ் அடிக்கடி பேசியது தெரிந்தது. இருவருக்குமான தொடர்பு குறித்து தெரிந்து சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தபோது இருவரும் அவமானம் தாங்காமல் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இவர்களது நோக்கம் காசம்மாளை கொலை செய்வது மட்டுமே. போலீஸ் கவனத்தை திசை திருப்ப நகைகளை கொள்ளையடித்து குறிப்பிட்ட இடத்தில் பாக்கியராஜ் பதுக்கினார். அதை மீட்டுள்ளோம் என்றனர்.