/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடங்கள் 18 மாதங்களில் நம் கண்முன் தெரியும்: காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் நம்பிக்கை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடங்கள் 18 மாதங்களில் நம் கண்முன் தெரியும்: காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் நம்பிக்கை
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடங்கள் 18 மாதங்களில் நம் கண்முன் தெரியும்: காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் நம்பிக்கை
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடங்கள் 18 மாதங்களில் நம் கண்முன் தெரியும்: காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் நம்பிக்கை
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடங்கள் 18 மாதங்களில் நம் கண்முன் தெரியும்: காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் நம்பிக்கை
ADDED : ஜூலை 20, 2024 03:00 AM

திருப்பரங்குன்றம் : 'மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடங்கள் 18 மாதங்களில் நம் கண்முன் தெரியும்,' என காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான பொது கலந்தாய்வு கூட்டம் தோப்பூர் எய்ம்ஸ் செயல் அலுவலகத்தில் காணொலி காட்சி வாயிலாக நடந்தது. மதுரை எய்ம்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹனுமந்தாராவ், நிர்வாக துணை இயக்குனர் விஜய்குமார் நாயக், மாணிக்கம் தாகூர் எம்.பி., நேரில் பங்கேற்றனர். காணொலி காட்சி மூலம் எய்ம்ஸ் அதிகாரிகள் பங்கேற்று கருத்து தெரிவித்தனர்.
பின்பு எய்ம்ஸ் கட்டடப் பணிகள் நடக்கும் இடத்தை மாணிக்கம் தாகூர் எம்.பி., பார்வையிட்டார்.
அவர் கூறியதாவது:
2023 ஜனவரியில் நடந்த கூட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட முடிவுகள் பற்றி ஆராயப்பட்டது. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்காக தற்பொழுது ராமநாதபுரத்தில் நடக்கும் வகுப்புகளும், அதற்கான ஆசிரியர்கள் நியமனம் பற்றியும், கட்டடங்கள் கட்டுமானப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மத்திய அரசு, எல் அண்டு டி நிறுவனத்திற்கு கட்டடப் பணிகளை வழங்கி இருக்கிறது. இந்த ஒப்பந்தப்படி 2024 மார்ச்சில் தொடங்கி 33 மாதங்களிலே இரண்டு கட்டங்களாக கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 18 மாதத்திற்குள் கட்டடங்கள் கட்டி முடிக்கப்படும். 2026 அக்டோபரில் இரண்டாவது கட்டமாக கட்டி முடிக்கப்படும் என்பதற்கான அறிக்கையை கொடுத்தனர்.
தமிழக அரசின் அனைத்து வகையான ஒத்துழைப்பும் வழங்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தினுடைய முழு ஒத்துழைப்போடு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடங்கள் கட்டி முடிக்கப்படுமா என்பது நம்முடைய நீண்ட நாள் கனவு. அது கனவாகவே ஒரு காலத்தில் இருந்தது.
தற்போது நம்பிக்கை பிறந்துள்ளது. முதல் கட்ட பணிகளில் 10 சதவீதம் முடிந்திருக்கிறது. 18 மாதங்களிலே நம் கண்ணுக்கு முன்னாலே தெரிகின்ற கட்டடமாக மாறும்.
ராமநாதபுரம் மருத்துவ கல்லுாரியில் ஐந்தாவது தளத்தில் வகுப்புகள் நடக்கிறது. மருத்துவ கல்லுாரியில் இரண்டு தளங்களிலே மாணவர்களுக்கான தங்கும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு சேரப்போகும் 50 மாணவர்களுக்கு அங்கு இடம் இல்லை. இது குறித்து மாநில அரசிடம் இன்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது என்றார்.