/உள்ளூர் செய்திகள்/மதுரை/விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் 'பழைய பல்லவி'; மாதக்கணக்கில் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்னைகள்விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் 'பழைய பல்லவி'; மாதக்கணக்கில் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்னைகள்
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் 'பழைய பல்லவி'; மாதக்கணக்கில் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்னைகள்
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் 'பழைய பல்லவி'; மாதக்கணக்கில் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்னைகள்
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் 'பழைய பல்லவி'; மாதக்கணக்கில் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்னைகள்
ADDED : ஜூலை 20, 2024 02:57 AM

கூட்டத்தில் டி.ஆர்.ஓ. சக்திவேல், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி, வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ், கலெக்டரின் பி.ஏ. ராணி பங்கேற்றனர்.
திரும்ப திரும்ப சொல்லப்பட்ட விவசாயிகளின் குறைகளாவன:
குபேந்திரன், மாங்குளம்:பெரியாறு பிரதான கால்வாய் மடை எண் 38ல் உள்ள பாசன கால்வாய் சேதமடைந்துள்ளது. ஓராண்டாக தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
முருகன், மேலுார்: ஒரு லட்சம் ஏக்கராக இருந்த பாசனப்பரப்பு தற்போது 2 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. ஆனால் பாசனத் தண்ணீரின் அளவு அதிகரிக்கவில்லை. இது எப்படி சாத்தியம். நீராதாரங்களையும் பாசனப்பரப்பையும் கணக்கெடுத்தால் தான் பாசனத்திற்கான தண்ணீரின் தேவை தெரியவரும்.
சாலமன் மலையாளம், மேட்டுப்பட்டி: திருமங்கலம்பிரதான 5வது கிளை நீட்டிப்பு வாய்க்காலை சீரமைக்க வேண்டும். வாலாந்துாரில் இருந்து கால்வாயின் ஷட்டர்கள் நொறுங்கியுள்ளது. கால்வாயை மூடி ஆக்கிரமித்துஉள்ளனர்.
கோடீஸ்வரன், ஒட்டகோவில்பட்டி: கிழவனேரி கண்மாயில் மீன் குத்தகையை ரத்து செய்ய கேட்கிறோம். ஆனால் மீன் வளர்ப்புக்கு பஞ்சாயத்து அனுமதி தரவில்லை என்கின்றனர்.
தங்கவேல், குறவக்குடி: குறவக்குடி வீரமலை கோயில் அருகில் உபரிநீர் கால்வாயில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை உடைந்துள்ளது. அதை சீரமைக்க வேண்டும்.
மணவாளக்கண்ணன், நாட்டாபட்டி: நெல் உலர வைப்பதற்கு களம் அமைத்து தர வேண்டும். அதற்கான இடவசதி உள்ளது.
தெய்வமணி, தேனுார்: தேனுார் பெரிய கண்மாய் மடைகளை சீரமைக்க கோரி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. நீர்க்கசிவு உள்ளது. சாக்கு வைத்து மடையை அடைத்துள்ளோம். தேனுாரில் அறுவடை துவங்கி விட்டதால் நெல் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும்.
புதிய புகார்கள்
மணிகண்டன், உசிலம்பட்டி: வண்டியூர் கண்மாயைச் சுற்றியுள்ள மருத்துவமனை, பெரிய கடைகளின் கழிவுநீர், சாயக்கழிவுநீர் கண்மாய்க்குள் விடப்படுகிறது. வாய்க்கால் கரையில் ரோடு அமைத்தால் மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு வரும் விவசாயிகள் பயன்பெறுவர்.
ராமன், நடுமுதலைக்குளம்: விக்கிரமங்கலம் துணை மின்நிலையத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. திடீரென 'ட்ரிப்' ஆவதால் விவசாய மின்மோட்டார்களை இயக்கமுடியவில்லை. 33 கே.வி. துணைமின் நிலையத்தை 110 கே.வி. யாக தரம் உயர்த்த வேண்டும்.
சேகர், புதுசுக்காம்பட்டி: சிறுமேளம் கண்மாயில் இருந்து விவசாய நிலங்களுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.
பார்த்தசாரதி, திருவாலவாயநல்லுார்: நீண்ட தொலைவிலிருந்து விவசாயிகள் பேசுவதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே குறைதீர் கூட்டத்தை 11:00 மணிக்கு பதிலாக காலை 10:00 மணிக்கே நடத்த வேண்டும்.
பகவான், ஜோதி மாணிக்கம்: ஜோதிமாணிக்கம் கிராமத்தில் உள்ள மின்கம்பத்தை மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தேன். கலெக்டரிடம் முறையிட்டதால் உடனடியாக மின்கம்பம் மாற்றப்பட்டது. கலெக்டருக்கு நன்றி.
கலெக்டர் பேசியதாவது:
நெல்லுக்கான பயிர் காப்பீட்டு திட்டம் ஜூலை 31ல் முடிகிறது. மக்களுடன் முதல்வர் திட்டம் இல்லாத 3 நாட்களை தேர்வு செய்து முகாம் அமைக்கப்படும். அதில் வி.ஏ.ஓ., மூலம் அடங்கல் வாங்கி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம். விவசாயிகள் திரும்ப திரும்ப வைக்கும் கோரிக்கைகளை அதிகாரிகள் உடனடியாக சரிசெய்யுங்கள். நீராதாரத்தை கணக்கெடுப்பு செய்வது அவசியம். அதுகுறித்து பரிசீலிக்கப்படும்.
100 சதவீத தேவைக்கு 40 சதவீத தொகை மட்டுமே அரசிடம் கிடைக்கிறது. எனவே நீர்வளத்துறை வாய்க்கால் பிரச்னை, பிற கோரிக்கைகள் முன்னுரிமை அடிப்படையில் செய்யப்படும் என்றார்.