/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குன்னத்துார் சத்திரம் கடைகளில் ரூ.2 கோடி வாடகை நிலுவை வசூலிப்பதில் சிறப்பு குழு ஜரூர் குன்னத்துார் சத்திரம் கடைகளில் ரூ.2 கோடி வாடகை நிலுவை வசூலிப்பதில் சிறப்பு குழு ஜரூர்
குன்னத்துார் சத்திரம் கடைகளில் ரூ.2 கோடி வாடகை நிலுவை வசூலிப்பதில் சிறப்பு குழு ஜரூர்
குன்னத்துார் சத்திரம் கடைகளில் ரூ.2 கோடி வாடகை நிலுவை வசூலிப்பதில் சிறப்பு குழு ஜரூர்
குன்னத்துார் சத்திரம் கடைகளில் ரூ.2 கோடி வாடகை நிலுவை வசூலிப்பதில் சிறப்பு குழு ஜரூர்
ADDED : ஜூன் 19, 2024 06:08 AM
மதுரை : மதுரை குன்னத்துார் சத்திரம் கடைகளில் ரூ.2 கோடி வரை வாடகை பாக்கி நிலுவை உள்ளதால் அவற்றை வசூலிக்க மாநகராட்சி சார்பில் சிறப்பு பில்கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்கடைகளின் தன்மைக்கு ஏற்ப ரூ.2 ஆயிரம் முதல் மாத வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலுவை வரிகள், வாடகையை வசூலிப்பதில் மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், குன்னத்துார் சத்திரக் கடைகளில் ரூ.1.90 கோடிக்கு மேல் வாடகை நிலுவை இருந்தது தெரியவந்தது.
கமிஷனர் தினேஷ்குமார் உத்தரவில் அவற்றை வசூலிக்க உதவி கமிஷனர் (வருவாய்) மாரியப்பன் மேற்பார்வையில் சிறப்பு பில் கலெக்டர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அதிகாரி ஒருவர் கூறுகையில் பெரும்பாலான கடைக்காரர்கள் உரிய நேரத்தில் வாடகை செலுத்துகின்றனர். பலர் 10 மாதங்களுக்கு மேல் கூட வாடகை பாக்கி வைத்துள்ளனர். நீண்டநாள் வாடகை நிலுவை வைத்துள்ள கடைகளுக்கு உரிய நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் வியாபாரிகள் சங்கம் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளன. அவை பரிசீலிக்கப்பட்டு நிலுவை வாடகை விரைவில் நுாறு சதவீதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.