/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்திற்கு முன்பு வணிகர்களின் கருத்துக்களையும் கேளுங்க ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்திற்கு முன்பு வணிகர்களின் கருத்துக்களையும் கேளுங்க
ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்திற்கு முன்பு வணிகர்களின் கருத்துக்களையும் கேளுங்க
ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்திற்கு முன்பு வணிகர்களின் கருத்துக்களையும் கேளுங்க
ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்திற்கு முன்பு வணிகர்களின் கருத்துக்களையும் கேளுங்க
ADDED : ஜூன் 19, 2024 06:09 AM
மதுரை : ''ஜூன் 22 ல் நடக்க உள்ள ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்திற்கு முன்பாக வணிகர்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டும்'' என தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.
சங்கத்தலைவர் வேல்சங்கர், கவுரவ செயலாளர் சாய் சுப்ரமணியம், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் கூறியதாவது:
25 கிலோவுக்கு குறைவான அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத வரி உள்ளது. எத்தனை கிலோ 'பேக்கிங்' செய்தாலும் வரி விதிக்கக்கூடாது. வறுத்த நிலக்கடலை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து, நுண்ணுாட்ட உரங்கள், கற்பூரம், பிஸ்கட், உடனடி உணவுகள், வெண்ணெய் மற்றும் நெய்க்கான 12 முதல் 18 சதவீத வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.
5 சதவீத வரி விதித்த ரஸ்க், ஈர இட்லிமாவு, வற்றல், புண்ணாக்கு வகைகளுக்கு வரியை ரத்து செய்ய வேண்டும்.
2017 ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி. அமலானபோது சட்ட நடைமுறை தெரியாததால் பல குளறுபடி ஏற்பட்டது.
எனவே முதல் ஐந்தாண்டுகளில் ஏற்பட்ட தவறுகளுக்கு வரி, அபராதம் கூடாது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் பருத்தி உட்பட 8 பொருட்களுக்கு முதலிலேயே 5 சதவீத ஜி.எஸ்.டி., வரி செலுத்த வேண்டும். இந்த நடைமுறை நிறைய வணிகர்களுக்கு தெரியவில்லை. மாநில வணிக வரித்துறையிலும் அறிவுரை வழங்காததால் பொருட்களை விற்கும் போது மட்டும் வரி செலுத்தியுள்ளனர்.
ஆனால் முன்கூட்டியே வரி செலுத்தவில்லை என்று கூறி தண்டத்தொகை, வட்டி விதித்து தொழிலையே முடக்குகின்றனர். விவசாயிகளிடம் வாங்கியதற்கான 5 சதவீத ஜி.எஸ்.டி., வரி கட்டுவதற்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
ஜூன் 22ல் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடக்க உள்ளது. மூன்றாண்டுகளாக இக்கூட்டம் நடைபெறும் முன் வணிகர்களின் கருத்துக்களைக் கேட்டு அனுப்பப்படவில்லை.
எங்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று கவுன்சில் கூட்டத்தில் வைக்க வேண்டும் என்றனர்.