/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாநகராட்சி பள்ளியில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை கலெக்டரிடம் மாணவிகள் மனு மாநகராட்சி பள்ளியில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை கலெக்டரிடம் மாணவிகள் மனு
மாநகராட்சி பள்ளியில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை கலெக்டரிடம் மாணவிகள் மனு
மாநகராட்சி பள்ளியில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை கலெக்டரிடம் மாணவிகள் மனு
மாநகராட்சி பள்ளியில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை கலெக்டரிடம் மாணவிகள் மனு
ADDED : ஜூன் 19, 2024 06:08 AM
மதுரை, : மதுரை கஸ்துாரிபாய் காந்தி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை வகுப்புகளில் பாடம் நடத்த போதுமான ஆசிரியர்களை விரைவில் நியமிக்க வலியுறுத்தி கலெக்டர் சங்கீதாவிடம், மாணவிகள், பெற்றோர் மனு அளித்தனர்.
இப்பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். மேல்நிலையில் 100க்கும் மேற்பட்டோர் படிக்கும் நிலையில் ஆங்கிலம், இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. ஒன்பது, 10ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்த தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர். இம்மாதம் தமிழ் ஆசிரியையும் ஓய்வு பெற உள்ளார்.
ஓய்வு பெற்ற ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பள்ளிநிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்தது.
இதனால் நாகேந்திரன் தலைமையில் மாணவிகள், பெற்றோர் சார்பில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
நாகேந்திரன் கூறுகையில், மூன்று பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை.
தலைமையாசிரியரும் இங்கு இல்லை. ஓய்வு பெற்றால் புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பள்ளியில் குடிநீர், கழிப்பறை வசதியின்றி மாணவிகள் அவதிப்படுகின்றனர்.
மாநகராட்சி கல்வி அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். தேவையான பாட ஆசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும் என்றார்.
தலைமையாசிரியை (பொறுப்பு) ரீட்டா கூறுகையில், மே 30ல் தான் ஆசிரியர்கள் ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு பதில் புதிய ஆசிரியர்களை ஒருவாரத்தில் நியமிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதுவரை பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். பெற்றோரிடம் உரிய விவரம் தெரிவித்த பின்பும் புகார் அளித்துள்ளனர் என்றார்.