/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குப்பை கொட்டினால் ரூ. 1லட்சம் அபராதம் * கமிஷனர் அறிவிப்பு குப்பை கொட்டினால் ரூ. 1லட்சம் அபராதம் * கமிஷனர் அறிவிப்பு
குப்பை கொட்டினால் ரூ. 1லட்சம் அபராதம் * கமிஷனர் அறிவிப்பு
குப்பை கொட்டினால் ரூ. 1லட்சம் அபராதம் * கமிஷனர் அறிவிப்பு
குப்பை கொட்டினால் ரூ. 1லட்சம் அபராதம் * கமிஷனர் அறிவிப்பு
ADDED : மார் 14, 2025 05:46 AM
மதுரை: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியான மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், உலகநேரி, உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை, உத்தங்குடி, பாண்டிகோயில் ரிங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என கமிஷனர் சித்ரா அறிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் உத்தங்குடி ரோடு பகுதியில் சிலர் குப்பையை கொட்டிவிட்டு சென்றனர். அகற்றாதது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஒருவர் மாநகராட்சியை கண்டித்தார். இதையடுத்து அப்பகுதியை மாநகராட்சி சுத்தம் செய்தது.
இந்நிலையில் மீண்டும் ரிங்ரோடு பகுதியில் குப்பை கொட்டப்பட்டது. இதுகுறித்து விசாரித்த மாநகராட்சி அச்சம்பத்து பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இருந்து வாகனம் மூலம் கொண்டுவரப்பட்டு குப்பை கொட்டியது தெரிய வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மண்டப உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து கமிஷனர் சித்ரா உத்தரவிட்டுள்ளார்.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: நகர் பகுதியில் இதுபோல் அபராதம் விதிப்பது நடைமுறையில் உள்ளது. அதேநேரம் பாண்டிகோயில் ரிங்ரோடு உள்ளிட்ட மாநகராட்சி எல்லைப் பகுதிகளில் வெளி மாவட்டங்களில் இருந்தும் கூட சிலர் குப்பையை கொட்டிச் செல்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது. சில இடங்களில் தனியார் கார் ேஷாரூம்கள் தங்கள் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டிச் செல்கின்றன. சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து 24 மணிநேரத்திற்குள் அகற்றாவிட்டால் தான் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே மக்கள், வணிக நிறுவனங்கள் குப்பைகளை மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பை சேகரிக்கும் துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்றார்.