/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ முருகன் கோவில்களில் வைகாசி விசாகம் வழிபாடு முருகன் கோவில்களில் வைகாசி விசாகம் வழிபாடு
முருகன் கோவில்களில் வைகாசி விசாகம் வழிபாடு
முருகன் கோவில்களில் வைகாசி விசாகம் வழிபாடு
முருகன் கோவில்களில் வைகாசி விசாகம் வழிபாடு
ADDED : ஜூன் 10, 2025 01:12 AM
கிருஷ்ணகிரி, வைகாசி விசாகம் முருகன் அவதரித்த திருநாள். வைகாசி திங்களில் வரும் விசாக நாளில், 6 நட்சத்திரங்கள் ஒன்று கூடுவதால், முருகனும், 6 முகங்களோடு காட்சியளிப்பார் என்பது நம்பிக்கை. இந்நாளில் பக்தர்கள் நோன்பிருந்து, முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.
நேற்று வைகாசி விசாகத்தையொட்டி, கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலில், அதிகாலை, முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. வள்ளி, தெய்வானையுடன் முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதேபோல், கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வினை தீர்த்த விநாயகர் கோவிலில் உள்ள முருகன் கோவில், ஜெகதேவி பாலமுருகன் கோவில், பெரியமுத்துார் கருமலை கந்தவேலர் கோவில், பர்கூர் அடுத்த சிகரலப்பள்ளி திருச்செங்குன்றம் கல்யாண முருகன் கோவில் என, மாவட்டத்திலுள்ள பல்வேறு முருகன் கோவில்களில், வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், 'அரோகரா' கோஷமிட்டு சுவாமியை வழிபட்டனர்.
வைகாசி விசாகத்தையொட்டி, காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் பெருமாள் கருட வாகனத்தில் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.