/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தொழிலாளியை துரத்தி தாக்கிய ஒற்றை யானை தொழிலாளியை துரத்தி தாக்கிய ஒற்றை யானை
தொழிலாளியை துரத்தி தாக்கிய ஒற்றை யானை
தொழிலாளியை துரத்தி தாக்கிய ஒற்றை யானை
தொழிலாளியை துரத்தி தாக்கிய ஒற்றை யானை
ADDED : ஜூன் 10, 2025 01:12 AM
ஓசூர், தளி அடுத்த மாருப்பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா, 58. கல் உடைக்கும் தொழிலாளி; இவர் நேற்று காலை ஆச்சுப்பாலம் கிராமம் அருகே பாறையை உடைக்கும் பணிக்காக, தன் டி.வி.எஸ்., மொபட்டில் சென்றார்.
சத்திரம்தொட்டி - தளி சாலையில் காலை, 7:30 மணிக்கு சென்றபோது, அங்கு சுற்றித்திரிந்த ஒற்றை யானை சாலைக்கு வந்து, கிருஷ்ணப்பாவை மொபட்டுடன் கீழே தள்ளி விட்டது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த அவரை யானை தாக்க ஓடியது.
அப்போது அவ்வழியாக சரக்கு வாகனத்தில் சென்றவர்கள் சத்தம் போடவே, கிருஷ்ணப்பாவை தாக்காமல், வனத்தை நோக்கி யானை சென்றது.
படுகாயமடைந்த அவர், தளி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜவளகிரி வனத்துறையினர் மற்றும் தளி போலீசார் விசாரிக்கின்றனர்.