Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 4 வாகனங்கள் பறிமுதல்

4 வாகனங்கள் பறிமுதல்

4 வாகனங்கள் பறிமுதல்

4 வாகனங்கள் பறிமுதல்

ADDED : ஜூன் 10, 2025 01:12 AM


Google News
போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி அடுத்த, புலியூரில் நேற்று காலை, 11:00 மணிக்கு போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா சென்றபோது, எதிரே எம்.சாண்ட் ஏற்றி வந்த, 2 டிம்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தார்.

அதில் எம்.சாண்ட் கடத்தி வந்ததை அறிந்து, அவற்றை பாரூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் தலைமறைவான லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர்.

* அகசிப்பள்ளி வி.ஏ.ஓ., கிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் அகசிப்பள்ளியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அரசு புறம்போக்கு நிலம் உள்ள பகுதியில் டிராக்டர் ஒன்றும், பொக்லைன் ஒன்றும் இருந்தது. அதில் 2 யூனிட் மண் கடத்த முயன்றதும் தெரிந்தது. கிருஷ்ணன் புகார் படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார், டிராக்டர், பொக்லைனை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us