Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பட்டுப்போன மரத்தை அகற்ற வலியுறுத்தல்

பட்டுப்போன மரத்தை அகற்ற வலியுறுத்தல்

பட்டுப்போன மரத்தை அகற்ற வலியுறுத்தல்

பட்டுப்போன மரத்தை அகற்ற வலியுறுத்தல்

ADDED : செப் 20, 2025 02:03 AM


Google News
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் நான்குரோட்டில் இருந்து, கடத்துார் செல்லும் சாலையில், அரூர் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் பழமை வாய்ந்த மரம், கடந்தாண்டு பட்டுப்போனது. ஆனால், இதுவரை மரத்தை அகற்ற அதிகாரிகள் முன் வரவில்லை.

காற்று வீசும்போது மரக்கிளைகள் முறிந்தும், மரம் வேரோடு சாய்ந்து விழும் நிலையுள்ளதால், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி சிறுவர்கள் அச்சமடைகின்றனர். எனவே, மின்வாரிய அலுவலக வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள பட்டுப்போன மரத்தை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us