/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மலைப்பாதையில் பீதியுடன் பள்ளிக்கு பயணம் கிருஷ்ணகிரி அருகே மாணவர்கள் தவிப்பு மலைப்பாதையில் பீதியுடன் பள்ளிக்கு பயணம் கிருஷ்ணகிரி அருகே மாணவர்கள் தவிப்பு
மலைப்பாதையில் பீதியுடன் பள்ளிக்கு பயணம் கிருஷ்ணகிரி அருகே மாணவர்கள் தவிப்பு
மலைப்பாதையில் பீதியுடன் பள்ளிக்கு பயணம் கிருஷ்ணகிரி அருகே மாணவர்கள் தவிப்பு
மலைப்பாதையில் பீதியுடன் பள்ளிக்கு பயணம் கிருஷ்ணகிரி அருகே மாணவர்கள் தவிப்பு
ADDED : செப் 20, 2025 10:57 PM

தளி:தளி ஒன்றியத்தில், கரடு, முரடான மலைவழிப்பாதையில் நடந்து சென்று, மாணவ - மாணவியர் பள்ளி செல்ல வேண்டியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம், டி.சூளகுண்டா கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, டி.சூளகுண்டா, மஞ்சுகிரி, பேலாளம், நந்திமங்கலத்தை சேர்ந்த, 83 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். மலை கிராம மாணவ - மாணவியரின் பள்ளி இடைநிற்றலை தடுக்கவும், உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கிலும் இப்பள்ளி செயல்படுகிறது.
நான்கு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். ஜவளகிரி - அஞ்செட்டி சாலையிலிருந்து பிரிந்து, 600 மீட்டர் துாரம் உள்ளே சென்றால் தான் பள்ளியை அடைய முடியும். இருபுறமும் வனம் சூழ்ந்த நிலையில், அதன் நடுவே கரடு, முரடான மலைப்பாதை வழித்தடத்தில் தான் மாணவ - மாணவியர் தினமும் அச்சத்துடன் நடந்து சென்று வருகின்றனர்.
ஆசிரியர்கள், மாணவ - மாணவியர் வாகனங்களில் செல்வதற்கு கூட இப்பாதை உகந்ததாக இல்லை. அதிகாரிகள் யார் வந்தாலும், இப்பள்ளிக்கு குறிப்பிட்ட துாரம் நடந்து தான் செல்ல முடியும். பள்ளிக்கு சாலை அமைத்து கொடுக்க அதிகாரிகளுக்கு மனம் வரவில்லை.
தினமும் அச்சத்துடன் பள்ளிக்கு நடந்து சென்று வரும் மாணவ - மாணவியரின் நலன் கருதி இப்பள்ளிக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.