/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி
தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி
தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி
தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி
ADDED : செப் 21, 2025 01:05 AM
ஊத்தங்கரை :ஊத்தங்கரை அருகே காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதி சாந்த
குமார் - மோனிஷா. நேற்று முன்தினம் மோனிஷாவின் தாய் வீடான பிள்ளியானுாருக்கு சென்றனர். அவர்களின், 2 வயதான ஆண் குழந்தை அம்ரிஷ், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். மோனிஷாவின் தந்தை வீட்டார், புதியதாக வீடு ஒன்று கட்டி வருகின்றனர்.
அந்த வீட்டின் அருகே தண்ணீர் தொட்டி அமைத்து, கட்டுமான பணிக்காக தண்ணீர் தொட்டி முழுவதும் தண்ணீர் நிரப்பியிருந்தனர். விளையாடி கொண்டிருந்த குழந்தை, அந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பலியானான். சாமல்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.