/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ லாரி - பைக் மோதி விபத்து அரசு மருத்துவமனை டாக்டர் பலி லாரி - பைக் மோதி விபத்து அரசு மருத்துவமனை டாக்டர் பலி
லாரி - பைக் மோதி விபத்து அரசு மருத்துவமனை டாக்டர் பலி
லாரி - பைக் மோதி விபத்து அரசு மருத்துவமனை டாக்டர் பலி
லாரி - பைக் மோதி விபத்து அரசு மருத்துவமனை டாக்டர் பலி
ADDED : செப் 20, 2025 02:03 AM
ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த நாகமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் பூவரசன், 26. அங்கு மருந்தாளுனராக வேலை செய்பவர் பிரபு, 27. இவர்கள் இருவரும், உள்ளு குறுக்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மாலை, 6:30 மணிக்கு, நோயாளிகளை கவனிக்க, பஜாஜ் பல்சர் பைக்கில் சென்றனர். டாக்டர் பூவரசன் பைக்கை ஓட்டினார்.
ராயக்கோட்டை சாலையில், முத்தம்பட்டி - உள்ளுகுறுக்கை இடையே சென்ற போது, எதிரே வந்த லாரியும், பைக்கும் மோதிக்கொண்டன. இதில் டாக்டர் பூவரசன் சம்பவ இடத்திலேயே பலியானார். மருந்தாளுனர் பிரபு தலையில் படுகாயமடைந்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.