/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 5 கிலோ கஞ்சா வைத்திருந்த வடமாநிலத்தவர் இருவர் கைது 5 கிலோ கஞ்சா வைத்திருந்த வடமாநிலத்தவர் இருவர் கைது
5 கிலோ கஞ்சா வைத்திருந்த வடமாநிலத்தவர் இருவர் கைது
5 கிலோ கஞ்சா வைத்திருந்த வடமாநிலத்தவர் இருவர் கைது
5 கிலோ கஞ்சா வைத்திருந்த வடமாநிலத்தவர் இருவர் கைது
ADDED : செப் 23, 2025 01:30 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வராசு மற்றும் போலீசார், கொத்தகொண்டப்பள்ளி அருகே டி.வி.எஸ்., சோதனைச்சாவடியில் நேற்று வாகன சோதனை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த வட மாநில வாலிபரை பிடித்து விசாரித்த போது, பீஹார் மாநிலத்தை சேர்ந்த பவன்குமார், 20, என்பதும், கொத்தகொண்டப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவதும் தெரிந்தது. அவரிடம் இரு கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.
அதனால், பவன்குமார் அறைக்கு சென்று போலீசார் சோதனை செய்தபோது, 2 கிலோ கஞ்சா சிக்கியது. அவருக்கு யார் சப்ளை செய்தது என கேட்ட போது, கொத்தகொண்டப்பள்ளியில் தங்கியுள்ள பீஹார் மாநிலத்தை சேர்ந்த கணேஷ்தாஸ், 45, என்பவர் விற்றது தெரியவந்தது. அவரது அறைக்கு சென்ற போலீசார், 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.