/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அரசின் தொகுப்பு வீடு கோரி பார்வையற்ற முதியவர் மனு அரசின் தொகுப்பு வீடு கோரி பார்வையற்ற முதியவர் மனு
அரசின் தொகுப்பு வீடு கோரி பார்வையற்ற முதியவர் மனு
அரசின் தொகுப்பு வீடு கோரி பார்வையற்ற முதியவர் மனு
அரசின் தொகுப்பு வீடு கோரி பார்வையற்ற முதியவர் மனு
ADDED : செப் 23, 2025 01:30 AM
கிருஷ்ணகிரி, :கிருஷ்ணகிரி அடுத்த தேவசமுத்திரத்தை சேர்ந்த பார்வையற்ற முதியவர் கோவிந்தசாமி, 65. இவர் தன் உறவினருடன் வந்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
நான் பிறவிலேயே கண் பார்வை இழந்தவன்.ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த எனக்கு பெற்றோர், சகோதரர்கள் இல்லை. உறவினர்கள் வீட்டில் உணவு அருந்தி, சாலையோரங்களில் படுத்து உறங்கி வருகிறேன்.
எனக்கு என்று எந்த சொத்தும் கிடையாது. மாற்றுத்திறனாளியான நான் மாதந்தோறும் வரும் உதவித்தொகையை கொண்டு வாழ்ந்து வருகிறேன். நான் வசிப்பதற்கு ஏதுவாக, எனக்கு தொகுப்பு வீடு ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்