/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ முதல்வர் கோப்பை போட்டி வென்றவர்களுக்கு பாராட்டு முதல்வர் கோப்பை போட்டி வென்றவர்களுக்கு பாராட்டு
முதல்வர் கோப்பை போட்டி வென்றவர்களுக்கு பாராட்டு
முதல்வர் கோப்பை போட்டி வென்றவர்களுக்கு பாராட்டு
முதல்வர் கோப்பை போட்டி வென்றவர்களுக்கு பாராட்டு
ADDED : செப் 23, 2025 01:30 AM
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. இதில், பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 511 மனுக்களை கொடுத்தனர். அதில், தகுதியானவற்றிற்கு உடனடியாக தீர்வு காண கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற, 2,212 வீரர், வீராங்கனைகளுக்கு, 44.41 லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலை, பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் தினேஷ்குமார் வழங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, துணை கலெக்டர் (பயிற்சி) க்ரிதி காம்னா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.