ADDED : ஜூலை 27, 2024 12:30 AM
தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த பெட்டமுகிலாளம் அருகே பசவனபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன், 28, வக்கீல்; இவர் நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு, தேன்கனிக்கோட்டை-அய்யூர் சாலையில் உள்ள ஏணிமுச்சந்திரம் பஸ் ஸ்டாப் அருகே பைக்கில் சென்றார்.
அப்பகுதியில் சிலர் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது மொபைல்போனில் வீடியோ கால் வந்ததால், பைக்கை சாலையோரம் நிறுத்தி விட்டு கிருஷ்ணன் பேசி கொண்டிருந்தார். அப்போது, எங்களை மொபைல்போனில் வீடியோ எடுக்கிறாயா என கேட்ட மர்ம நபர்கள், அவரை தாக்கி விட்டு தப்பி சென்றனர்.இதில் காயமடைந்த வக்கீல் கிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகார்படி, தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரித்து சின்ன அத்திக்கோட்டையை சேர்ந்த தனுஷ், 22, பெரிய பூதக்கோட்டையை சேர்ந்த ரஞ்சித்குமார், 22, கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மஞ்சுநாத், 22, ஆகியோரை கைது செய்தனர்.