/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.6.17 லட்சம் மோசடிதனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.6.17 லட்சம் மோசடி
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.6.17 லட்சம் மோசடி
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.6.17 லட்சம் மோசடி
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.6.17 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 27, 2024 12:30 AM
கிருஷ்ணகிரி: தனியார் நிறுவன ஊழியரிடம், பங்குசந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி, 6.17 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது.ஓசூர், தளிரோடு ஜவர்கலால் நகரை சேர்ந்தவர் ரமேஷ், 27.
தனியார் நிறுவன ஊழியர். இவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு கடந்த ஜூன், 12ல், ஒரு மெசேஜ் வந்தது. அதில், சில குறிப்பிட்ட நிறுவனங்கள் பெயரை குறிப்பிட்டு, அதன் பங்குசந்தையில் நாங்கள் அனுப்பியுள்ள லிங்க் மூலம் பண முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என இருந்தது. அதை நம்பி சிறிதளவு முதலீடு செய்த ரமேசுக்கு லாபத்துடன் பணம் திரும்ப கிடைத்தது. இதையடுத்து தன்னிடம் இருந்த, 6 லட்சத்து, 17 ஆயிரத்து, 284 ரூபாயை அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்தார். அதன்பின் அவருக்கு எந்த பணமும் வரவில்லை; அந்த இணையதள பக்கங்களும் முடங்கின. தன்னை தொடர்பு கொண்ட எண்களுக்கு ரமேஷ் போன் செய்த போது அந்த எண்கள் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரமேஷ், இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைமில் நேற்று முன்தினம் அளித்த புகார்படி போலீசார் விசாரிக்கின்றனர்.